ராமநாதபுரம் ஜூன், 12
ராமநாதபுரம் ஏர்வாடி தர்காவில் இன்று சந்தனக்கூடு திருவிழா நடைபெற உள்ளது. இதற்காக மே 31ம் தேதி கொடியேற்றம் நடந்தது. சந்தனக்கூடு திருவிழா இன்று மாலை தொடங்கி நாளை அதிகாலை வரை நடைபெறும் இதற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வந்து பங்கேற்பார்கள். விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வருடா வருடம் மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் சந்தனக்கூடு திருவிழா நடைபெறுகிறது.