கரும்பு ஜூஸில் ஏராளமான நன்மைகள் காணப்படுகிறது. அதனால் தான் ஊட்டச்சத்து நிபுணர்களே இதை வாரத்திற்கு மூன்று முறை எடுத்துக் கொள்ள பரிந்துரைக்கின்றனர்.
தற்போது இணையதளம் என்பது பிரபலங்களின் பிட்னஸ் ரகசியங்களை அறிந்து கொள்ளும் ஒரு வழியாக உள்ளது. இதன் மூலம் ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த பிரபலங்களின் அழகு பராமரிப்பு மற்றும் உடல் பராமரிப்பு டிப்ஸ்களை அறிந்து கொண்டு பின்பற்றுகிறார்கள். பிரபலங்களும் அதற்கேற்றாற் போல் பிட்னஸ் சேலஞ் முதல் டயட் முறைகள் வரை தங்கள் சோஷியல் மீடியாவில் போடுகின்றனர். அப்படித்தான் பிரபல நடிகை கரீனா கபூர் கானின் ஊட்டச்சத்து நிபுணரான ருஜுதா திவேகர், இன்ஸ்டாகிராமில் கரும்புச் சாற்றின் நன்மைகளைப் பற்றி கூறியுள்ளார்.
கரீனா கபூரின் அழகு மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கும் இவர் ஒரு முக்கிய காரணம். பொதுவாக ஊட்டச்சத்து நிபுணர்கள் நம் உடலை ஆரோக்கியமாக வைக்க எந்த மாதிரியான உணவை எடுத்துக் கொள்ள வேண்டும் என கூறுகின்றனர்.
கரும்பு சாற்றில் இல்லாத சத்துக்களே இல்லை எனலாம். இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், இரும்பு, மெக்னீசியம், கால்சியம் மற்றும் பிற எலக்ட்ரோலைட்டுகள் என நிறைய உள்ளன. இவை உடலில் தொற்று நோயை எதிர்த்து போராடவும், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. அதனால் தான் மஞ்சள் காமாலைக்கு ஒரு தீர்வாக கரும்பு சாற்றை சொல்லுகின்றனர்.
கரும்பு சாறு ஒரு டையூரிடிக் திரவம் என்பதால் அதை குடிப்பது நல்லது. இது சிறுநீர் பாதை நோய்த்தொற்றை தடுக்க உதவுகிறது. இது சிறுநீரகங்கள் சிறப்பாக செயல்பட உதவுகிறது. சிறுநீரக கற்களுக்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது. இது வீக்கம் மற்றும் சோர்வை நீக்க உதவுகிறது.
பொதுவாக பெண்கள் முகப்பரு பிரச்சினையால் பெருமளவில் பாதிக்கப்படுகிறார்கள். கரும்பு சாறு அதை எதிர்த்து போராட உதவுகிறது. இது வயதாகுவதை தடுக்கிறது. முகப்பருக்கள் மற்றும் புடைப்புகளை குறைக்கிறது. பொடுகுத் தொல்லை இருப்பவர்கள் கரும்பு சாற்றை பயன்படுத்தி வந்தால் அது நநீங்கும்
மேலும் கரும்பு சாறு நம்முடைய கல்லீரலை வலிமையாக்குகிறது. கல்லீரலில் உள்ள நச்சுக் கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது. இது செரிமானம் மற்றும் கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்துவதால் மஞ்சள் காமாலையை போக்க உதவுகிறது.
மலச்சிக்கலை போக்க உதவுகிறது
கரும்பு சாற்றில் நிறைய மலமிளக்கி பண்புகள் உள்ளன. இவை மலச்சிக்கலை போக்கி செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. வயிற்றில் ஏற்படும் பாக்டீரியா தொற்றுக்களைத் தடுக்கிறது. மலக்கட்டுப் பிரச்சினையைக் கட்டுப்படுத்துகிறது.
பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சினைகளுக்கு தீர்வளிக்க கரும்பு சாறு உதவுகிறது. மாதவிடாய் அறிகுறிகளை குறைக்க உதவுகின்றன. எனவே உங்க மாதவிடாய் காலம் ஒரு வாரத்திற்கு முன்பே கரும்பு சாற்றை தவறாமல் குடியுங்கள்.
எனவே இந்த நன்மைகளை பெற வாரத்திற்கு 3 முறையாவது கரும்பு சாற்றை குடியுங்கள். நீரழிவு நோயாளியாக இருந்தால் அரை கிளாஸ் போதுமானது என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர். அதே பிரஷ்ஷான கரும்பு சாற்றை குடியுங்கள், பாட்டிலில் அடைக்கப்பட்ட கரும்பு சாற்றை குடிக்காதீர்கள்.