கீழக்கரை மார்ச், 17
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் இன்று மாலை 5.30 மணியளவில் கீழக்கரை 12 வது வார்டுக்குட்பட்ட முஸ்தபா கறிக்கடை சந்து மற்றும் செல்லவாப்பா பூமாலை கடை சந்து பகுதிகளை நகர்மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டார்.
மேலும் அந்த பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து நகர்மன்ற உறுப்பினர் ராணி(எ)உம்முசல்மா எடுத்துரைத்தார்.
உரிய நிதி ஒதுக்கீடு செய்து முன்னுரிமை அடிப்படையில் பணிகள் நிறைவேற்றி கொடுக்கப்படும் என நகர் மன்ற தலைவர் கூறினார்.
மேலும் நகர்மன்ற அதிகாரிகள் அருள்,சாம்பசிவம்,பரக்கத்துல்லாஹ்,உதயா உள்ளிட்டோர் ஆய்வு செய்து தலைவரிடம் ஆலோசித்தனர்.
ஜஹாங்கீர்
தாலுகா நிருபர்
கீழக்கரை.