நாகப்பட்டினம் மார்ச், 16
அமைச்சராக பொறுப்பேற்றதை தொடர்ந்து நாகை மாவட்டம் திருக்குவளையில் இருக்கும் கருணாநிதி வீட்டுக்கு சென்று வந்துள்ளார் உதயநிதி ஸ்டாலின். பயணத்தின் போது, அளித்த பேட்டியில் கடந்த முறை பிரச்சாரத்தின் போது இங்கு கைதானேன். இப்போது அமைச்சராக வந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. கருணாநிதி ஸ்டாலின் வழியில் மக்கள் பணியாற்றுவேன் என உறுதி கூறினார். மேலும் செல்லும் இடமெல்லாம் அதிக வரவேற்பு உள்ளதாகவும் கூறினார்.