திருவண்ணாமலை பிப், 18
திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்ட இரண்டு பேரை அரியானாவில் தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர். திருவண்ணாமலை, போளூர், கலசப்பாக்கம் உள்ளிட்ட நான்கு பகுதிகளில் ஏடிஎம்களை உடைத்து பிப்ரவரி 12ம் தேதி கொள்ளையில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் அரியானாவில் மேவாத் பகுதியில் கொள்ளை கும்பத் தலைவன் ஆரிப், ஆசாத் ஆகிய இரண்டு பேரை கைது செய்துள்ள காவல் துறையினர் அவர்களை திருவண்ணாமலை அழைத்து வர திட்டமிட்டு வருகின்றனர்