திருப்புல்லாணி ஜன, 13
தமிழக முதல்வரின் உத்தரவிற்கிணங்க இன்று தமிழகம் முழுவதும் சமத்துவ பொங்கல் விழா வெகுவிமர்சையாக நடந்து கொண்டிருக்கிறது.
அதன் ஒருபகுதியாக ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியத்திற்குட்பட்ட தாதநேந்தல் ஊராட்சி மன்றத்தின் காய்கறி தோட்டத்தில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.
ஊராட்சி மன்ற தலைவர் கோகிலா ராஜேந்திரன் தலைமையிலும் மண்டல வட்டார வளர்ச்சி துணை அலுவலர் ஜீவா முன்னிலையிலும் மகளிர் சுய உதவிக்குழுவினர் பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.
மேலும் சமத்துவ பொங்கலை முன்னிட்டு கோலப்போட்டி, பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகளும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
ஜஹாங்கீர்
தாலுகா நிருபர்.
கீழக்கரை.