ராமநாதபுரம் ஜன, 6
ராமநாதபுரம் மாவட்டம், பேரையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜானி டாம் வர்கீஸ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அரசு மருத்துவமனையில் உள்ள பதிவேடுகளை பார்வையிட்டதுடன் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் வருகை குறித்து வட்டார மருத்துவ அலுவலரிடம் கேட்டறிந்தார்.