திருவண்ணாமலை ஜன, 4
சந்தவாசல் அருகே உள்ள கேளூர் அணைப்பேட்டை பகுதியில் 100 நாள் திட்ட தொழிலாளர்கள், தங்களுக்கு ஊதியம் வழங்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையறிந்த சந்தவாசல் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றனர். பின்னர் ஊராட்சி மன்ற தலைவர் அன்பு, போராட்டம் நடத்தியவர்களிடம் ஊதியம் தர உறுதியளித்ததின் பேரில் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.