ஸ்ரீஹரிகோட்டா ஜன, 1
2023 ஆம் ஆண்டில் அறிவியல் திட்டங்கள் பலவற்றை இஸ்ரோ மேற்கொள்ள உள்ளது சூரியனைப் பற்றி ஆய்வுக் கொள்ள ஆதித்யா என்ற விண்கலத்தை இஸ்ரோ இந்த ஆண்டு அனுப்பவுள்ளது. இது தவிர நிலவுக்கு சந்திரயான்-3 என்ற விண்கலத்தை அனுப்புகிறது. விண்ணுக்கு மனிதனை அனுப்புவதற்காக மேற்கொள்ளப்படும் ககன்யான் திட்டத்தில் ஆளில்லா விண்கலத்தை இந்த ஆண்டு இறுதியில் இஸ்ரோ அனுப்புகிறது.