கீழக்கரை ஆகஸ்ட், 11
ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி அருகே உள்ள சேதுக்கரை செல்லும் பாதையில் உள்ளது ஸ்ரீனிவாசப்பெருமாள் ஆலயம். இங்கு அகஸ்தியர் தீர்த்தம் உள்ளது. இந்த ஆலயம் நன்றாக பராமரிக்கப்பட்டால் சேதுக்கரையில் கடலில் குளித்து வரும் பக்தர்கள் நீராடவும் வசதியாக இருக்கும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் திருப்புல்லாணி சேதுக்கரை செல்பவர்கள் தங்கள் ஆடைகளை கடலில் போட வேண்டாம் எனவும், இயற்கையின் அதிசய அற்புதம் மன்னார் வளைகுடா பகுதியை சுகாதாரமான முறையில் பாதுகாக்க கோவில் நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது.