கோயம்புத்தூர் டிச, 26
கோவை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காலங்களில் டெங்கு பாதிப்பு அதிகமாக காணப்படுவது வழக்கம். அதன்படி தற்போது டெங்கு பாதிப்பு அதிகளவில் காணப்படுகிறது. சுகாதாரத் துறை சார்பில் டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் நியமித்து தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், பணியாளர்கள் பற்றாக்குறையால் தொடர்ச்சியாக டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத நிலை இருந்து வந்தது.
இந்நிலையில் டெங்கு தடுப்பு பணிகளுக்கு கூடுதலாக பணியாளர்கள் நியமித்துகொள்ள அரசு அனுமதியளித்துள்ளதை தொடர்ந்து கூடுதலாக 120 பேர் நியமித்துள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.