திருவண்ணாமலை டிச, 24
செங்கம் பேரூராட்சியில் ஜீவானந்தம் தெருவில் இருந்து ராஜவீதி, பெருமாள் கோவில் தெரு, சிவன் கோவில் தெரு செல்லும் குறுக்கு தெருக்களில் தெரு விளக்குகள் அடிக்கடி பழுது ஏற்படுகிறது. குறிப்பாக ராஜவீதியில் இருந்து ஜீவானந்தம் செல்லும் குறுக்கு தெருவில் அடிக்கடி மின்விளக்குகள் பழுது ஏற்படுகிறது. தெருவிளக்குகள் பழுது ஏற்பட்டால் நாள் கணக்கில் பழுது சரி செய்யப்படாமல் உள்ளதால் அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது.
இதனால் சிறுவர்கள், பெண்கள் உள்பட பொதுமக்கள் நடமாட அச்சப்படும் சூழல் நிலவுகிறது. தெருக்களுக்கு போதிய மின்விளக்குகள் அமைத்து பழுதடைந்துள்ள மின்விளக்குகளை மாற்றி புதிய மின்விளக்குகள் அமைத்து தர உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.