ஆப்கானிஸ்தான் டிச, 21
ஆப்கானிஸ்தான் பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிப்பதற்கு தாலிபான்கள் இடைக்கால தடை விதித்துள்ளனர். அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் இந்த உத்தரவு செல்லும் என்றும் அடுத்த உத்தரவு வரும் வரை இது அமலில் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளனர். ஒரு ஆண்டுக்கு மேலாக ஆட்சி செய்து வரும் தாலிப்பான்கள் அங்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.