ஆப்கானிஸ்தான் நவ, 30
ஆப்கானிஸ்தானில் நிகழ்த்தப்பட்ட பயங்கர குண்டுவெடிப்பில் 16 பேர் உடல் சிதறிப் உயிர் இழந்தனர். மேலும் 24 பேர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடி வருகின்றனர் ஐபக் நகரத்தில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் ரத்த வெள்ளமாக காட்சியளித்தது. இதுவரை எந்த ஒரு பயங்கரவாத இயக்கமும் இந்த குண்டு வெடிப்புக்கு பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.