அமெரிக்கா நவ, 28
அமெரிக்காவில் உயர்அழுத்த மின் கோபுரத்தின் மீது குட்டி விமானம் மோதி விபத்துக்குள்ளானது.
மேரிலேண்ட் மாநிலம் மோன்ட்கோமெரி பகுதியில் இரவு நேரத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த விமானம் நியூயார்க்கின் வெஸ்ட்செஸ்டர் விமான நிலையத்தில் இருந்து மோன்ட்கோமெரி விமான நிலையத்திற்கு சென்றுள்ளது. தரையிறங்குவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னதாக விபத்தில் சிக்கி உள்ளது.
இதனால் 100 அடி உயரத்தில், மின் கோபுரத்தில் விமானம் தொங்கிக்கொண்டிருந்தது. இந்த விபத்தால் அப்பகுதி முழுவதும் மின்சாரம் தடைபட்டது. வீடுகள், தெருக்கள் அனைத்தும் இருளில் மூழ்கின. விபத்து பற்றி தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.