நாமக்கல் நவ, 24
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பணியாற்றி வரும் அங்கன்வாடி பணியாளர்கள் குழந்தைகளுக்கு முன்பருவ கல்வியை வழங்குவதுடன், கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சத்தான உணவு வகைகள் குறித்த ஆலோசனைகளையும் வழங்கி, குழந்தைகளின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வருகின்றனர்.
அங்கன்வாடிகளில் பயிலும் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு மாதா, மாதம் எடை மற்றும் உயரம் அளவிடுதல், ஊட்டச்சத்து நிலை ஆகியவை குறித்து அங்கன்வாடி பணியாளர்கள் கணக்கெடுப்பு செய்து வருகின்றனர்.
இதையொட்டி நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம், கூலிப்பட்டி அங்கன்வாடி மையத்திற்கு மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் சென்று குழந்தைகளுக்கு விளையாட்டுடன் கூடிய கல்வி கற்கும் வகையிலான விளையாட்டு பொருட்கள் தேவையான அளவு இருப்பதையும், குழந்தைகள் அந்த விளையாட்டு உபகரணங்களை பயன்படுத்தி விளையாடுவதையும் பார்வையிட்டார்.