கள்ளக்குறிச்சி நவ, 22
கள்ளக்குறிச்சி அருகே அரியபெருமானூர் கிராமத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் சார்பில் உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு தூய்மை நடை பயணம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கினார். ஊராட்சி ஒன்றிய குழு சேர்மேன் அலமேலு ஆறுமுகம் முன்னிலை வகித்தார். அரியபெருமானூர் ஊராட்சி மன்றத்தலைவர் சிவக்குமார் வரவேற்றார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மணி, உதவி இயக்குநர் ரத்தின மாலா, உதவி திட்ட அலுவலர் ராஜசேகர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடராஜன், நாகராஜன் மற்றும் கிராம பொதுமக்கள், பள்ளி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.