ராணிப்பேட்டை நவ, 19
ஆற்காடு நகராட்சிக்கு உட்பட்ட 6 பள்ளிகளில் 661 மாணவ- மாணவிகளுக்கு தமிழக முதலமைச்சரால் தொடங்கப் பட்ட காலை உணவு திட்டம் கடந்த சில மாதங்களாகச் செயல்பட்டு வருகிறது. ஆற்காடு நகராட்சி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி 1-ல் உள்ள முதலமைச்சரின் காலை உணவு திட்ட சமையல் கூடத்தில் குழந்தை களுக்காக சமைக்கப்பட்ட உணவின் சுவை மற்றும் தரத்தினை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் நேரில் சென்று பார்வையிட்டு சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தார்.
பின்னர் ஆற்காடு தோப்புக்கானா வடக்கு உயர்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுடன் அமர்ந்து சாப்பிட்டார். அப்போது ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சீனிவாச சேகர், நகராட்சி பொறியாளர் கணேசன், நகர மன்ற உறுப்பினர் குணா, முன்னாள் நகரமன்ற உறுப்பினர் பென்ஸ் பாண்டியன் உள்பட பலர் உடன் இருந்தனர்.