Spread the love

கோவை நவ, 19

மேட்டுப்பாளையம் மற்றும் அன்னூர் ஒன்றியங்களில் உள்ள பள்ளேபாளையம், இலுப்பநத்தம், பொகளூர், குப்பனூர், அக்கரை செங்கம்பள்ளி, வடக்கலூர் உள்ளிட்ட 6 ஊராட்சிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 3850 ஏக்கரில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் வாயிலாக சிப்காட் அமைக்க அரசு முடிவு செய்தது. இதனை கண்டித்து அப்பகுதி விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர் .

மேலும் கோவை வந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலினையும் நேரில் சந்தித்து மனு அளித்தனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அன்னூர் சிட்கோ அமைப்பதற்காக 3731 ஏக நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசாணை வெளியிட்டது.

இதனால் இப்பகுதி விவசாயிகள் அதிர்ச்சி அடைந்து சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நமது நிலம் நமதே போராட்ட குழுவின் சார்பில் அன்னூரை அடுத்துள்ள குழியூரில் 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு ஆலோசனை கூட்டம் நடத்தி இருசக்கர வாகனங்களில் பேரணி நடத்தினர்.

இந்த கூட்டத்தில் விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேணுகோபால், நமது நிலம், நமதே தலைவர் ரவிக்குமார் மற்றும் விவசாயிகள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *