சென்னை நவ, 19
டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வு இன்று தமிழக முழுவதும் நடைபெற இருக்கிறது. இந்த தேர்வை 3 லட்சத்து 22 ஆயிரத்து 414 பேர் எழுதுகின்றனர். காலை 9:30 மணிக்கு தொடங்கும் இத்தேர்வு பிற்பகல் 12:30 மணி வரை நடக்கும். துணை ஆட்சியர், வணிகவரி உதவி ஆணையாளர், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி, ஊரக மேம்பாட்டு துறை உதவியக்குனர் ஆகிய குரூப்-1 பதவிகளில் உள்ள 92 காலிபணியிடங்களுக்கு இத்தேர்வு நடக்கிறது.