புதுடெல்லி நவ, 19
குடியரசுத் தலைவராக பதவியேற்ற பின் முதன்முறையாக தமிழகம் வருகிறார் திரௌபதி முர்மு. திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழக 36 வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்ட நிலையில், இப்பல்கலைக்கழக 37 வது பட்டமளிப்பு விழா அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறுகிறது. இதில் குடியரசுத் தலைவர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.