துபாய் டிச.15
ஐக்கிய அரபு அமீரகத்தில் துவங்க இருக்கும் (Einstein World Record) எய்ன்ஸ்டைன் உலக சாதனை சான்றிதழ் வழங்கும் நிறுவனத்தின் துவக்கம் மற்றும் LOGO சின்னம் வெளியீட்டு விழா நடைபெற்றது.
இந்நிகழ்வில் பத்திரிக்கையாளர் மற்றும் சமூக பிரபலமானவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி அமீரக அஜ்மானில் உள்ள உல்லாச விடுதியில் நிறுவனத்தின் தலைவர் கார்த்திக் குமார் மற்றும் நிர்வாக இயக்குனர் நரம்பியல் மற்றும் மனநல ஆலோசகர் டாக்டர் மோனிகா தலைமையில் Fuji Japan நிறுவனத்தின் செயல்பாடு தலைமை அதிகாரி சதிஷ் முன்னிலையில் Spread Smiles மக்கள் ஆர்.ஜே சாராவின் வரவேற்புரையுடன் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிறுவனம் உலகளவில் உள்ள தனித்திறனாளர்களின் திறமைகளை இனம் கண்டு அவர்களின் திறமைகளை உலகறிய அங்கீகாரம் பெரும்வகையில் திறமையாளர்களுக்கு உலக சாதனையாளர் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கிறது.
இவ்விழாவிற்கு பிஎம் குழும நிறுவனம் மற்றும் கில்லி 106.5 எப் எம் நிறுவனர் கனகராஜ், கேப்டன் டிவி முதன்மை நிருபர் கமால் கேவிஎல், தினகுரல் தேசிய நாளிதழின் முதன்மை நிருபர் மற்றும் வணக்கம் பாரதம் வார இதழ் இணை ஆசிரியர் நஜீம் மரிக்கா, ரேடியோ கேரளம் பிரதீப், தமிழ் FM பிரதீஸ், ஷியாம், டேஸ்டி பிரியாணி ஹனீபா, ஹமீது, மஹ்ரூப், ஆர்ஜே அஞ்சனா உள்ளிட்ட பல ஊடகவியாளர்கள் மற்றும் பல சமூக பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
மேலும் இந்நிகழ்ச்சிக்கு இணையவாயிலாக தொழிலதிபர் லக்ஷ்மி நாராயணன் வாழ்த்துரை வழங்கியது குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சியின் நிறைவாக மக்கள் ஆர்ஜே சாரா நன்றியுரையுடன் இரவு விருந்து உபசரிப்புடன் நிகழ்ச்சி நிறைவுபெற்றது.
M.நஜீம் மரைக்கா B.A.,
இணை ஆசிரியர்.
அமீரக செய்த