சிவகங்கை நவ, 14
காரைக்குடி நகர அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் காரைக்குடி வடக்கு, காரைக்குடி தெற்கு என இரண்டாக பிரிக்கப்பட்டது. புதிய நகர செயலாளர்கள் அறிமுக கூட்டம் மற்றும் உறுப்பினர் அட்டை வழங்கும் விழா மாவட்ட அ.ம.மு.க. அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட செயலாளர் தேர்போகி பாண்டி தலைமை தாங்கினார்.மாநில பொறியாளர் அணி தலைவர் சரவணன் முன்னிலை வகித்தார்.
மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் விமல் வரவேற்றார். காரைக்குடி தெற்கு நகர செயலாளராக கார்த்திக், வடக்கு நகர செயலாளராக அஸ்வின் குமார் நியமிக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டனர்.
அனைத்து நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டையை மாவட்ட செயலாளர் தேர்போகி பாண்டி வழங்கி உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுத்த தேவையான ஆலோசனைகளை வழங்கினார். இதில் பொதுக்குழு உறுப்பினர் பழனி பெரியசாமி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர்கள் பந்தாபாண்டி, முத்துபாரதி, மாவட்ட பொருளாளர் லாரன்ஸ், மாவட்ட இளம்பெண்கள் பாசறை செயலாளர் சுமதி உள்பட நிர்வாகிகள், தொண்டர்கள், மகளிரணியினர் திரளாக கலந்துகொண்டனர்.நகர தலைவர் மைக்கேல் நன்றி கூறினார்.