துபாய் நவ, 14
ஐக்கிய அரபு அமீரக ஷார்ஜா மியா மாலிலுள்ள (NESTO) நெஸ்டோ ஹைப்பர் மார்க்கட்டில் வளாகத்தில் WIT (Where In Tamilnadu) என்ற பெண்கள் அமைப்பு நடத்திய தீபாவளி கொண்டாட்டம் நடைபெற்றது.
இக் கொண்டாட்டத்தில் அமைப்பின் தலைவி மெர்லின் தலைமையில், நிர்வாகிகள் முன்னிலையில் சுரேஷ் (GMH) ஆதரவோடு பெண்களுக்கான கோலம் மற்றும் சமையல் போட்டி உள்ளிட்ட பல்வேறு தனித்திறன் நிகழ்ச்சிகளோடு மிகச்சிறப்பாக நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்த சிறந்த நடிகையும் சிறந்த பாடகியுமான ரம்யா நம்பிசன் மற்றும் அமீரகத்தை சேர்ந்த அஜ்மான், சுற்றுலா தலைமை அதிகாரி மைதா ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் இசைத்திறன் நிகழ்ச்சியாளர்களான லக்ஷிமி ஜெயன், ரித்திக் ராஜ், ஊடகம் சார்பாக ஹமீது யாசின், வணக்கம் பாரதம் முதன்மை செய்தியாளர் நஜீம் மரிக்கா, (NESTO) நெஸ்டோ பொதுமேலாளர், மேலாளர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்கள், டிக்டாக் பிரபலங்கள் மற்றும் தமிழர்கள், மலையாளிகள் உள்ளிட்டோர் பலர் குடும்பத்துடன் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்புப் பணிகளை WIT அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் அபிநயா பாபு, ஷைலஜா, உள்ளிட்டோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
மேலும் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கும், நிகழ்ச்சிக்கு ஆதரவு வழங்கிய கௌரவ மற்றும் சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் நினைவு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்நிகழ்வின் நிறைவாக அமைப்பின் தலைவி மெர்லின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுபெற்றது.
நஜீம் மரைக்கா.
முதன்மை செய்தியாளர்.
அமீரக செய்திப் பிரிவு.