அமெரிக்கா நவ, 13
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்கு 2022 ம் ஆண்டிற்கான காந்தி அமைதி விருது வழங்கப்பட்டது. அமெரிக்காவிலிருந்து செயல்படும் காந்தி அறக்கட்டளை அகிம்சைக்காக குரல் கொடுப்பவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் இவ்விருதை வழங்கி இருக்கிறது. காந்தி வலியுறுத்திய அஹிம்சையை உலக முழுவதும் பரப்பி மனித குலத்திற்கு சிறப்பான பங்களிப்பை வழங்கியதற்காக வாழும் கலை நிறுவனருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.