கோயம்புத்தூர் நவ, 11
ஈரோட்டில் நடைபெறும் தி.மு.க. பிரமுகர் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். கோவை விமான நிலையத்தில் அவருக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதையொட்டி கோவை விமான நிலையத்தில் இருந்து சித்ரா சந்திப்பு வரை தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் சாலையின் இருபுறத்திலும் திரண்டு நின்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பு அளித்தனர். அப்போது அவர், வேனில் இருந்தபடி பொதுமக்களை பார்த்த கையை அசைத்தபடி சென்றார். அப்போது செண்டை மேளம், ஜமாப் அடித்து மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.