துபாய் நவ, 9
அமீரகத்தில் செயல்படும் WIT (Where In Tamilnadu) அமைப்பு நடத்தும் தீபாவளி கொண்டாட்டம் வருகிற நவம்பர் 13 ம் தேதி மாலை 5 மணியளவில் ஷார்ஜா அல் நாதா பகுதியில் மியா மாலில் உள்ள நெஸ்டோ ஹைப்பர் மார்க்கட் வளாகத்தில் நடைபெற உள்ளது.
இதில் சிறப்பு விருந்தினராக தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்த சிறந்த நடிகையும், பாடகியுமான ரம்யா நம்பீசன் கலந்து கொள்கிறார்.
மேலும் இந்நிகழ்வில் சமையல் போட்டி, கோலப்போட்டி, மற்றும் பல கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. உடன் பல்வேறு திறமையாளர்களும் முக்கிய பிரமுகர்களும் கலந்துகொண்டு இந்நிகழ்வினை சிறப்பிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நஜீம் மரைக்கா. முதன்மை செய்தியாளர்.அமீரக செய்திப் பிரிவு.