Spread the love

கடலூர் ஆகஸ்ட், 6

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் கடலூர் செம்மண்டலம் மறுக்கட்டுமான திட்டப் பகுதி பயனாளிகள் 117 பேருக்கு கருணைத்தொகை மற்றும் தற்காலிக ஒதுக்கீடு ஆணை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குனர் கோவிந்தராவ் திட்ட விளக்க உரையாற்றினார். இந்நிகழ்ச்சிக்கு தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். ஒதுக்கீடு ஆணை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் கலந்து கொண்டு, 117 பயனாளிகளுக்கு தலா ரூ.24 ஆயிரம் வீதம் ரூ.28 லட்சம் கருணைத்தொகையை வழங்கி, தற்காலிக ஒதுக்கீடு ஆணையையும் வழங்கி பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசன், சட்ட மன்ற உறுப்பினர்கள் அய்யப்பன், சபா.ராஜேந்திரன், கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரிராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், மாநகர திமுக செயலாளர் ராஜா, வி.ஆர். அறக்கட்டளை நிறுவனர் விஜயசுந்தரம், மண்டல தலைவர்கள் சங்கீதா செந்தில், பிரசன்னா, இளையராஜா, கவுன்சிலர்கள் விஜயலட்சுமி, செந்தில்குமாரி, புஷ்பலதா உள்பட கவுன்சிலர்கள், அரசு அலுவலர்கள், பயனாளிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகளை உடனே படிக்க.

http://www.vanakambharatham24x7news.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *