கீழக்கரை நவ. 8
காமராஜ் பவுண்டேசன் ஆஃப் இந்தியாவின் ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகளை அதற்கான இந்தியாவின் தேசிய பொதுச் செயலாளர் பேராசிரியர் டாக்டர் கே. ஜான் குமார் நியமித்துள்ளார்.
அதனடிப்படையில் ஒருங்கிணைப்பாளராக ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த கீழக்கரை ரோட்டரி கிளப் தலைவர் எஸ். சம்சூல் கபீர், மாவட்ட துணைத் தலைவராக ரோட்டரி டாக்டர் அப்பா மெடிக்கல் எஸ். சுந்தரம் மாவட்ட செயலாளராக மூத்த நிருபர் கே.குகன், இணைச் செயலாளராக ஏ. அப்துல் பாசித் ஆகியோர் அதிகாரபூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
காமராஜ் பவுண்டேசன் ஆஃப் இந்தியா அமைப்பானது பெருந்தலைவர் காமராஜரின் கொள்கைகளையும் அவரது செயற்கரிய சாதனைகளையும் இந்தியாவெங்கும் பரப்புவதை நோக்கமாகக் கொண்டு கடந்த 47 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகின்றது.
டாக்டர் ஏ. நீலலோகிதாசன் காமராஜ் பவுண்டேசன் ஆஃப் இந்தியாவின் நிறுவனர் ஆவார்.இவர் கேரளாவின் முன்னாள் அமைச்சரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் காமராஜ் பவுண்டேசன் ஆஃப் இந்தியாவின் தேசிய மாநாடு வருகின்ற 17 மற்றும்18 தேதிகளில் டிசம்பர் 2022-ல் ராமநாதபுரத்தில் உள்ள ஹாஜா மஹாலில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நஜீம் மரைக்கா.
முதன்மை செய்தியாளர்.
அமீரக செய்திப் பிரிவு.