சென்னை நவ, 8
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் வாகன விற்பனை 48% அதிகரித்துள்ளதாக ஆட்டோமொபைல் டீலர் சங்கம் தெரிவித்துள்ளது. கார் விற்பனை 41% இருசக்கர வாகனங்கள் 51% மற்றும் வர்த்தக வாகன விற்பனை 25 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும் 3 சக்கர வாகன விற்பனை 66% மற்றும் டிராக்டர் விற்பனை 17 சதவீதம் அதிகரித்துள்ளது. பண்டிகை காலங்களில் வாகன விற்பனை கடந்த ஆண்டு விட 29 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.