அமெரிக்கா நவ, 8
அடுத்த வாரம் அரசியல் ரீதியாக மிகப்பெரிய அறிவிப்பை வெளியிட இருப்பதாக அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். சமீப நாட்களாக அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக சூசகமாக ட்ரம்ப் கூறி வந்தார்.
இந்நிலையில் நவம்பர் 15ம் தேதி ஃப்ளோரிடாவின் பால்ம் பீச்சில் மிக முக்கியமான அந்த அறிவிப்பை வெளியிட இருப்பதாக கூறியுள்ளார்.