கடலூர் நவ, 8
வடகிழக்கு பருவ மழை தொடர்ந்து பெய்து வருவதால் கடலூர் மாவட்டம் சிதம்பரம், குமராட்சி, கீரப்பாளையம், குறிஞ்சிப்பாடி ,குள்ளஞ்சாவடி உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விளைநிலங்களில் தண்ணீர் சூழ்ந்து பாதிப்பு ஏற்பட்டது.
தற்போது தொடர் மழை பெய்து வருவதால் பெரும்பாலான விளைநிலங்களில் தண்ணீர் வடியாமல் பயிர்கள் அழுகி வரும் நிலை ஏற்பட்டு உள்ளது. நேற்று கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் புவனகிரி சேத்தியாத்தோப்பு காட்டுமன்னார்கோவில் பரங்கிப்பேட்டை குறிஞ்சிப்பாடி கடலூர் தொழுதூர் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.
இதனை தொடர்ந்து நேற்று தொடர் மழை காரணமாக ஒரு குடிசை வீடும் மற்றும் 4 கால்நடைகளும் இறந்துள்ளன இது மட்டும் இன்றி மாவட்டம் முழுவதும் முக்கியசாலைகள் அனைத்தும் பெரிய அளவிலான பள்ளம் ஏற்பட்டு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.