Spread the love

துபாய் நவ, 6

ஐக்கிய அரபு அமீரக ஷார்ஜாவில் சென்னைப் பல்கலைக்கழக அரபுத்துறைப் பேராசிரியர் முனைவர் அ. ஜாகிர் ஹுசைன் அரபியிலிருந்து தமிழாக்கம் செய்துள்ள அமீரக எழுத்தாளர் கவிஞர் டாக்டர் ஷிஹாப் கானம் கவிதைகள் “உப்பு” எனும் தலைப்பில் நேற்று மாலை 3.30 மணிக்குஷார்ஜா சர்வதேச புத்தகக் கண்காட்சியில் டிஸ்கவரி புக் பேலஸ் சார்பில் வெளியிடப்பட்டது .

இந்நிகழ்வில் பேராசிரியர் முனைவர் அ. ஜாகிர் ஹுசைன் விருந்தினர்களை வரவேற்று நூல் அறிமுக உரை நிகழ்த்தினார். அமீரக கவிஞர் டாக்டர் ஷிஹாப் கானம் நூலை வெளியிட டாக்டர் பாலாஜி ராமசாமி (இந்திய தூதரக அதிகாரி, அபுதாபி) முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார்

.இதனைத் தொடர்ந்து, நடராஜன் (தலைவர், இந்திய சமூக, கலாச்சார மையம், அபுதாபி), கோபிநாத் (ஊடகவியலாளர், விஜய் தொலைக்காட்சி), ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

மேலும் கணேசன் ஹரி நாராயணன் (நிறுவனத் தலைவர், டோக்கியோ தமிழ்ச் சங்கம்), பிர்தவ்ஸ் பாஷா, சமூக செயற்பாட்டாளர், அபுதாபி), ஹமீத் யாசீன் (பொதுச் செயலாளர், ஈமான் அமைப்பு, துபாய்) ஆகியோர் பிரதிகளைப் பெற்றுக் கொண்டனர்). வேடியப்பன் (டிஸ்கவரி புக் பேலஸ்) நன்றியுரை வழங்கினார். எழுத்தாளர் பிரியா நிகழ்ச்சியைத் தொகுத்தார்.

அமீரக தமிழ் எழுத்தாளர்கள் வாசகர்கள் மற்றும் தமிழ்ச் சொந்தங்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

அமீரக கவிஞர் ஒருவரின் கவிதைகள் அரபியிலிருந்து தமிழில் மொழியாக்கம் செய்யப்படுவது இதுவே முதன்முறை. அரபிக் கவிதைகள் அரபியிலிருந்து நேரடியாக தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டு அரபு நாட்டில் வெளியிடப்பட்டது பலரது கவனத்தையும் பாராட்டையும் பெற்றது.

பேராசிரியர் ஜாகிர் ஹுசைன் ஈரோடு தமிழன்பன் அவர்களின் கவிதைகளை அரபியில் மொழியாக்கம் செய்து, சென்ற ஆண்டு ஷார்ஜா சர்வதேசப் புத்தகக் கண்காட்சியில் வெளியிட்டார். பேராசிரியர் ஜாகிர் ஹுசைன் திருக்குறள், அவ்வையின் ஆத்திசூடி, பாரதியார் கவிதைகளை அரபியில் மொழியாக்கம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நஜீம் மரைக்கா. முதன்மை செய்தியாளர்.அமீரக செய்திப் பிரிவு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *