சென்னை நவ, 6
சென்னை, தி.நகர், வாணி மஹாலில் எம்.ஜி.ஆர். கிரியேஷன்ஸ் தொண்டு அறக்கட்டளை மற்றும் எம்.ஜி.ஆர். கிரியேஷன் துவக்க விழா நடைபெற்றது. அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி குத்துவிளக்கு ஏற்றி விழாவை துவக்கி வைத்து, கலைத்துறையை சேர்ந்த சங்க நிர்வாகிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கினார்.
இந்நிகழ்வின்போது தலைமைக் கழகச் செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்களான எஸ்பி வேலுமணி, வளர்மதி, திரைப்பட இயக்குநர்களான சந்திரசேகர், செல்வமணி, ராஜன், சத்தியஜோதி தியாகராஜன், திரைப்பட துறையை சேர்ந்த ஜாக்குவார் தங்கம், ரவிமரியா, சுரேஷ், சிவன் சீனிவாசன், தீனா, சிவா, கௌதம் சுந்தர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.