சென்னை நவ, 5
சென்னையில் உள்ள 200 வார்டுகளில் இன்று காலை 9 மணி முதல் 4 மணி வரை மெகா சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் மழைக்கால நோய்கள் வருவதை தடுப்பதற்கு இந்த சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காய்ச்சல், சளி, வயிற்றுப்போக்கு உள்ளவர்கள் இந்த மருத்துவ முகாம்களை பயன்படுத்தி பயன்பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.