கோவை நவ, 2
கோவை மாநகராட்சி 63வது வார்டில் உள்ளாட்சி தினத்தை ஒட்டி வார்டு சபை கூட்டம் இன்று நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டார்.
பின்னர் அமைச்சர் செந்தில் பாலாஜி நிருபர்களுக்கு பேட்டியில்,
வட கிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது ஒன்றரை லட்சம் மின்வாரிய ஊழியர்கள் தயார் நிலையில் உள்ளனர்.சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.மின்வாரியம் பருவமழையை எதிர்கொள்ள அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்துள்ளது என தகவல் தெரிவித்தார்.