Spread the love

திருப்பூர் அக், 31

திருப்பூர் மாநகரத்தில நீண்ட நாட்களாக உரிமை கோரப்படாமல் கேட்பாரற்று இருக்கும் வாகனங்களை கைப்பற்றி அதன் மீது வழக்கு பதிவு செய்ய திருப்பூர் மாநகர காவல் ஆணையர் பிரபாகரன் உத்தரவிட்டிருந்தார்.

இதன்படி திருப்பூர் மாநகரில் பல்வேறு இடங்கள் மற்றும் இருசக்கர வாகன நிற்கும் இடங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. மாநகர வடக்கு காவல் நிலைய சரகத்தில் இரண்டு வழக்குகள் பதியப்பட்டு 68 வாகனங்களும், அனுப்பர்பாளையம் காவல் நிலைய சரகத்தில் ஒரு வழக்கு பதியப்பட்டு 30 வாகனங்களும், திருமுருகன் பூண்டி காவல் நிலைய சரகத்தில் இரண்டு வழக்குகள் பதியப்பட்டு 60 வாகனங்களும், திருப்பூர் தெற்கு காவல் நிலைய சரகத்தில் நான்கு வழக்குகள் பதியப்பட்டு 294 வாகனங்களும், மத்திய காவல் நிலைய சரகத்தில் ஒரு வழக்கு பதியப்பட்டு 12 வாகனங்களும், நல்லூர் காவல் நிலைய சரகத்தில் ஒரு வழக்கு பதியப்பட்டு 37 வாகனங்களும், வீரபாண்டி காவல் நிலைய சரகத்தில் இரண்டு வடக்கு பதியப்பட்டு 67 வாகனங்களும் ஆக மொத்தம் 14 வழக்குகள் பதியப்பட்டு மாநகர காவல் துறையின் சார்பில் 564 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவை முறையான சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு ஏலத்திற்கு விடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது போன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து நடத்தப்பட்டு சட்டத்திற்கு உட்பட்ட வீட்டுக்குள் கேப்பாராற்று கிடக்கும் வாகனங்களை உரிய நேரத்தில் காவல் துறையின் சார்பில் ஏலம் விட்டால் அரசுக்கு ஒரு நல்ல வருமானம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

மேலும் இதுபோன்ற வாகனங்களை நிறுத்துவதற்கு இடமில்லாமல் சிரமப்படும் அவல நிலையும் ஏற்படாது. வண்டிகள் முறையாக ஏலம் விடப்படும் வரை நீண்ட நாட்கள் அதனை பாதுகாக்க வேண்டிய அவசியமும் ஏற்படாது.

எனவே தற்போதைய மாநகர காவல் ஆணையர் இதுகுறித்து ஒரு நல்ல தீர்வு கண்டு அவ்வப்போது இது போன்ற வாகனங்களை எல்லாம் அப்புறப்படுத்தினால் வாகனங்கள் பழுதுபடாத நிலையில் நல்ல தொகைக்கு ஏலம் எடுக்கப்படும். இது போன்ற தொடர் நடவடிக்கைகள் இருக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

A. மருதமுத்து.
செய்தியாளர்.
திருப்பூர் செய்திப் பிரிவு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *