மதுரை அக், 31
இந்திய மாற்றுத்திறனாளிகளின் கிரிக்கெட் அணியின் கேப்டனாக தேர்வாகியுள்ள மதுரையை சேர்ந்த சச்சின் சிவா என்பவர் தேர்வாகியுள்ளார்.
அவரை பாராட்டி வாழ்த்து தெரிவிக்கும் விதமாக, எஸ்.டி.பி.ஐ கட்சியின்
மாநில செயற்குழு உறுப்பினரும்,
மதுரை மண்டல செயலாளரான முஜிபுர் ரஹ்மான் தலைமையில்,
மதுரை தெற்கு மாவட்ட பொது செயலாளர் சாகுல் ஹமீது,
மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் தாஜுதீன், மதுரை வடக்கு மாவட்ட செயலாளர்
கமால் பாஷா மற்றும் நிர்வாகிகள் அவரது இல்லத்திற்கு நேரில் சென்று வாழ்த்துக்களை தெரிவித்தனர்.