கோவை அக், 31
கோவை கோட்டைமேடு பகுதியில் கடந்த 23 ம்தேதி அதிகாலையில் கார் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் காரில் இருந்த ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தான். இது தொடர்பாக இறந்த ஜமேஷா முபினுடன் தொடர்பில் இருந்த முகமது தல்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், அப்சர்கான் ஆகிய 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களை தனிப்படை காவல்துறையினர் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.
தற்போது இந்த வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டது. என்.ஐ.ஏ. தென் மண்டலங்களுக்கான காவல் தலைமை இயக்குனர் வந்தனா தலைமையிலான அதிகாரிகள் கோவையில் முகாமிட்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டதை தொடர்ந்து, இதுவரை விசாரணை நடத்தி வந்த கோவை போலீசார் தாங்கள் சேகரித்த ஆவணங்களை என்.ஐ.ஏவிடம் ஒப்படைத்தனர்.