கடலூர் அக், 31
கடலூர் மாவட்டம் பண்ருட்டி – சென்னை சாலை, பண்ருட்டி -கும்பகோணம் சாலைகுண்டும் குழியுமாகி போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலையாக மாறி உள்ளது. இந்த சாலையை செப்பனிடக்கோரி பொதுமக்கள், வர்த்தக சங்கத் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.
ஆனால் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் அதிமுக. வார்டு நகர் மன்ற தலைவர் லாரி வெங்கடேசன் தனது சொந்த செலவில் டிப்பர் லாரிகளில் ஜல்லி, தார் ஆகியவை எடுத்து வந்து புல்டோசர் எந்திரம் மூலம் மெகா பள்ளங்களை சரி செய்தார். இவரது முயற்சியை பொது மக்கள் பாராட்டினர்.