கீழக்கரை ஆகஸ்ட், 5
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி நகர்மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா தலைமையில் கீழக்கரை காவல் நிலையம் முதல் கடற்கரை வரை நடைப்பயணங்களை மேற்கொண்டு பின்னர் கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது.
இந்நிகழ்வில் நகர்மன்ற உறுப்பினர்களும் மற்றும் முகமது சதக் பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் மற்றும் மாணவர்கள் கடலோர காவல் படையினர்கள் கீழக்கரை சரகம் காவல் துணை கண்காணிப்பாளர், காவல் அலுவலர்கள் இணைந்து கீழக்கரை கடற்கரையில் துப்புரவு பணியில் ஈடுபட்டனர்.
மேலும் கீழக்கரை அனைத்து கவுன்சிலர்கள், வார்டு உறுப்பினர்கள், நகராட்சி மேற்பார்வையாளர் சக்திவேல் மற்றும் பொதுமக்கள் இதில் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை உடனே படிக்க..
http://www.vanakambharatham24x7news.in