கீழக்கரை ஆகஸ்ட், 5
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் கொரோனா பரவல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரானா பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி நேற்று நடைபெற்ற கீழக்கரை நகராட்சி மற்றும் தனியார் கல்லூரி முகாமில் 300-க்கும் மேற்பட்ட மக்கள் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
அப்போது சுகாதார துறை துணை இயக்குனர் அஜீத் பிரபு குமார், வட்டார மருத்துவர் செய்யது ராசிக்தீன், வட்டார சுகாதார துறை மேற்பார்வையாளர் பக்கீர் முகமது, கவுன்சிலர் மீரான் அலி, நகராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் சக்தி உள்பட நகராட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
வருகிற ஞாயிற்றுக்கிழமை கீழக்கரை அரசு மருத்துவமனை, நகராட்சி, ஆரம்ப சுகாதார நிலையம், நாடார் பள்ளி, பி.எஸ்.எம் மருத்துவமனை ஆகிய இடங்களில் இலவச பூஸ்டர் தடுப்பூசி முகாம் நடைபெறும் என்பதை வட்டார மருத்துவர் செய்யது ராசிக்தீன் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனே படிக்க..
http://www.vanakambharatham24x7news.in