திருவனந்தபுரம் அக், 27
கேரள நிதியமைச்சர் பாலகோபாலை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று ஆளுநர் ஆரிப் முகமது கான் கோரிக்கை வைத்துள்ளார்.
கேரளாவில் பல்கலைக்கழக துணை வேந்தர்களை நியமன விவகாரத்தில் மாநில அரசுக்கும், ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.
ஜனநாயகம் மிகுந்த கேரள மாநிலத்தின் பல்கலைக்கழக செயல்பாடுகள் குறித்து புரிந்து கொள்ள முடியாது. பனாராஸ் பல்கலைக்கழகத்தில் துணை வேந்தர்களுக்கு கூட 50 முதல் 100 பேர் ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும். இதுபோன்ற மாநிலங்களில் இருந்து வந்தவர்களால் கேரள பல்கலைக்கழங்கள் செயல்பாட்டை புரிந்துகொள்வது கடினம் என மறைமுகமாக ஆளுநரை பாலகோபால் விமர்சித்து இருந்தார்.
ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமான உயர் கல்விமுறை கடைபிடிக்கும்போது அது குறித்த தவறான தோற்றத்தை உருவாக்க அமைச்சர் பாலகோபால் முயல்கிறார். பாலகோபால் கருத்து தேச ஒற்றுமைக்கு மட்டுமல்லாது, ஒருமைப்பாட்டுக்கும் சவால் விடுப்பதாகும். நமது அரசியலமைப்பு சட்டம் ஆளுநர்கள் வெளிமாநிலத்திலிருந்து வருவதை அவசியமாக்குகிறது.
அது மாநில அரசின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் வராது. அந்த பல்கலைக்கழகத்தில் பிற மாநிலங்களில் இருந்து அதிக துணைவேந்தர்களைக் கொண்டுள்ளது என்பது பாலகோபால் அறியவில்லை. அரசியலமைப்புச் சட்ட நெறிமுறைகளை அறியதவராக அமைச்சர்கள் உள்ளனர். பதவிப்பிரமாணத்தின் எடுத்துக்கொண்ட உறுதிமொழியை மீறிவிட்டார். அதனால் பாலகோபாலை பதவியில் இருந்து நீக்க அரசுக்கு பரிந்துரை செய்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டது.
இதற்கு நிதியமைச்சர் பாலகோபாலை பதவியில் இருந்து நீக்க முடியாது என்று ஆளுநரின் கோரிக்கையை முதலமைச்சர் பினராயி விஜயன் நிராகரித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், அமைச்சர் பாலகோபாலின் பேச்சு ஆளுநர் பதவிக்கு அவமரியாதையை ஏற்படுத்தவில்லை என்று பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.