கள்ளக்குறிச்சி அக், 26
ரிஷிவந்தியம், பகண்டை கூட்டு ரோட்டில் உள்ள ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தமிழக அரசு சார்பில் ரிஷிவந்தியம் ஒன்றியத்தை சேர்ந்த 10 மாற்றுத்திறனாளிகள் உள்பட 114 பேருக்கு ரூ.1 கோடியே 69 லட்சத்து 36 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதற்கு கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட திமுக. செயலாளரும், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம் கார்த்திகேயன் தலைமை தாங்கி, 10 மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர ஸ்கூட்டர்களையும், 104 பேருக்கு ஆடு, மாடுகள் வாங்கவும், கொட்டகை கட்டுவதற்கான உத்தரவு ஆணைகளையும் நலத்திட்ட உதவியாக வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் திமுக. ஒன்றிய செயலாளர்கள் பெருமாள், பாரதிதாசன், துரைமுருகன், மாவட்ட துணைச் செயலாளர் அண்ணாதுரை, நிர்வாகி சாமி சுப்பிரமணியன் உள்பட நிர்வாகிகள், ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர்.