மதுரை அக், 19
உசிலம்பட்டி பகுதியில் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ. 10 உயர்த்தி வழங்க வலியுறுத்தி பால் உற்பத்தி சங்கத்தினர் நக்கலப்பட்டியில் மதுரை-தேனி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல் மதுரை மற்றும் பெரிய செம்மெட்டுப்பட்டி ஆகிய இடங்களிலும் இன்று காலை திடீர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அவர்கள் பசுமாடுகளுடன் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். இதில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் பெருமாள் தலைமையில் மாவட்டத்தலைவர் சந்திரன், மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டி மற்றும் நிர்வாகிகள் நடராஜன், மகேந்திரன், சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் பெருமாள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தற்போது ஒரு தண்ணீர் பாட்டில் ரூ. 20க்கு விற்பனை செய்யப்படும் நிலையில் பாலுக்கு உரிய விலை கிடைக்கும் வகையில் லிட்டருக்கு ரூ.10 உயர்த்தி வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்துவோம் என்றார்.