சென்னை அக், 17
சென்னைக்கு அடுத்தபடியாக ஆவடி மாநகராட்சியில் பூமிக்கு அடியில் கேபிள் மூலம் மின்சாரம் அமைக்கப்பட்டு அதன் அடிப்படையில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் 13 பேனல்கள் மற்றும் ஆவடி காமராஜர் நகர் பகுதியில் 15 பேனல்கள் என மின்வாரியம் சார்பாக 6 இடங்களில் ரூ.1 கோடி 35 லட்சம் செலவில் மின்சார வளைய சுற்றுதர அமைப்புடன் கூடிய 28 மின்சார டிரான்ஸ்பார்மர் பேனல் (ரிங் மெயின் யூனிட்) அமைக்கப்பட்டுள்ளது. இதனை தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் தொடங்கிவைத்தார்.
அவருடன் ஆவடி மின்வாரிய செயற்பொறியாளர் அருணாச்சலம், உதவி பொறியாளர்கள் செந்தில்குமார், முருகன், ஆவடி மாநகராட்சி மேயர் உதயகுமார் மற்றும் கவுன்சிலர்கள், கட்சி பிரமுகர்கள் உள்பட பலர் உடன் இருந்தனர்.
