திருப்பத்தூர் ஆகஸ்ட், 4
திருப்பூர் மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளில் பயின்று வரும் மாணவ, மாணவிகள் விடுதிகளின் உரிமங்களை, அந்தந்த நிறுவனங்களின் உரிமையாளர்கள், நிர்வாகிகள் அனைவரும் வருகிற 25-ம் தேதிக்குள் விடுதிகள் நடத்துவதற்கான உரிமங்களை உரிய அலுவலர்கள் மூலம் மனு செய்து பெற்றுக் கொள்ள வேண்டும்.
மேலும், மாணவ, மாணவியர் விடுதிகளை நிறுவனத்திற்கு உள்ளேயோ அல்லது வெளியிலோ நடத்திட உரிய அனுமதி பெறுவதற்கான வழிகாட்டுதல்களை மாவட்ட சமூக நல அலுவலர், முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், திருப்பத்தூர் வருவாய் கோட்டாட்சியர், வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் ஆகிய அலுவலர்களை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, 25-ம் தேதிக்கு பின்னர் உரிமம் இன்றி இயங்கும் அனைத்து மாணவ, மாணவிகள் விடுதிகளை நடத்தும் பள்ளி, கல்லூரி நிர்வாகிகள் மேல் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.