Spread the love

நாகப்பட்டினம் ஆகஸ்ட், 3

நாகூரில் பிரசித்திப்பெற்ற தர்கா உள்ளது. உலகம் முழுவதும் இருந்து மக்கள் இந்த தர்காவுக்கு வந்து பிரார்த்தனை செய்ய வருகை தருகிறார்கள். பிரசித்திப்பெற்ற நாகூர் தர்காவுக்கு சொந்தமாக நிலங்கள் உள்ளிட்ட சொத்துக்கள் ஏராளம் உள்ளன. இதில் நிலங்கள் சில தனி நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள நாகூர் தர்கா அறங்காவலர் குழுவினர், ஆக்கிரமிப்பில் உள்ள நாகூர் தர்கா சொத்துக்களை மீட்க நாகூர் தர்கா சொத்துக்கள் மீட்பு குழு என்ற பிரிவினை உருவாக்கி உள்ளனர்.

மேலும் 28,524 சதுர அடி நிலம் இந்த பிரிவை சேர்ந்தவர்கள் ஆக்கிரமிப்பில் உள்ள தர்கா சொத்துக்களை கண்டறிந்து, அவற்றை மீட்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு உள்ளனர். இவர்கள் அந்தந்த மாவட்ட நிர்வாக அதிகாரிகளின் உதவியுடன் ஆக்கிரமிப்பு செய்தவர்களிடம் பேசி, சொத்துக்களை மீட்டு வருகின்றனர்.

அதன்படி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள திருமைலாடி கிராமம் துளசேந்திரபுரம் பகுதியில் ஆக்கிரமிப்பில் இருந்த 28 ஆயிரத்து 524 சதுர அடி நிலம் மீட்கப்பட்டு அதற்கான ஆவணங்கள் நாகூர் தர்கா மேனேஜிங் டிரஸ்டி காமில் சாஹிப் மற்றும் அறங்காவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுவரை நாகூர் தர்கா சொத்துக்கள் மீட்பு குழுவினர் 7.50 லட்சம் சதுர அடி ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *