திருப்பூர் அக், 3
தளி வனஉயிரினங்களை பாதுகாப்பது எப்படி என்று ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வன உயிரின வார விழிப்புணர்வு கொண்டாடப்பட்டது. வன உயிரின வார விழா அரியவகை தாவரங்கள் மற்றும் உயிரினங்கள் உள்ள வனப்பகுதியை பாதுகாக்கும் வகையில் வனத்துறை சார்பில் விழிப்புணர்வு மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.அந்த வகையில் வனஉயிரின வார விழா ஆண்டுதோறும் அக்டோபர் முதல் வாரத்தில் கொண்டாடப்படுகிறது. மேலும் வனம் மற்றும் வன உயிரினங்களின் பாதுகாப்பு குறித்தும் வனத்தின் பரப்பளவை அதிகரிப்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தியும் மரக்கன்றுகளும் நடவு செய்யப்பட்டது. மேலும் வனம் மற்றும் வன உயிரினங்களை காப்போம் என சுற்றுலா பயணிகளால் உறுதிமொழி ஏற்கப்பட்டு கையெழுத்து பிரசாரம் தொடங்கப்பட்டது. அதுமட்டுமின்றி இந்த வாரம் முழுவதும் வனம் மற்றும் வன உயிரினங்களை பாதுகாப்பது குறித்து கையெழுத்து பிரசாரம், விழிப்புணர்வு போன்ற நிகழ்ச்சிகள் ஒவ்வொரு நாளும் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதில் வனச்சரக அலுவலர் சுரேஷ் உள்ளிட்ட வனத்துறை அதிகாரிகள், பணியாளர்கள், பொதுமக்கள், சுற்றுலாபயணிகள் பலர் கலந்து கொண்டனர்.