புதுடெல்லி செப், 28
சினிமா துறையில் சிறந்த சேவையாற்றி வரும் கலைஞர்களுக்கு ஆண்டு தோறும் தாதாசாகேப் பால்கே விருது வழங்கபடுகிறது. தமிழகத்தில் சிவாஜி கணேசன், கே. பாலசந்தர் உள்ளிட்டோருக்கு இந்த விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுளது.
இந்நிலையில், குஜராத்தை சேர்ந்த பழம்பெரும் இந்தி நடிகை ஆஷா பரேக்கிற்கு தாதாசாகேப் விருது வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. 2020-ம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது ஆஷா பரேக்கிற்கு வழங்கப்படும் என மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் அறிவித்துள்ளார். குஜராத்தைச் சேர்ந்த 79 வயது ஆஷா பரேக் 1952 முதல் 1999 வரை நடித்துள்ளார். 1959ம் ஆண்டு ஷம்மி கபூருக்கு ஜோடியாக தில் தேகே தேகோ என்ற திரைப்படத்தில் ஆஷா பரேக் அறிமுகமானார். 1992-ல் ஆஷா பரேக்குக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.